இறுதிச்சொட்டு ரத்தம் உள்ளவரை அமேசானைக் காப்போம் - முரா பழங்குடியினர்

0 1126

புனிதமான வனத்தைக் காக்க இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என அமேசானின் முரா பழங்குடியினர் உறுதிபூண்டுள்ளனர்.

3 வாரங்களுக்கும் மேலாக பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் சூழலில் இது தங்களுக்கு எதிராக வெள்ளையின மக்கள் நடத்தும் அட்டூழியம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

இங்கு இறந்து கிடக்கும் உயிர்கள் வீணடிக்கப்பட்டதாக மரங்களின் பேரழிவை உயர்திணைக்கு ஒப்பிட்டு வேதனை தெரிவிக்கின்றனர். அழிப்பது அவர்கள் இலக்கு என்றும், உடலில் கடைசி சொட்டு ரத்தம் மிச்சம் இருக்கும் வரை அமேசானில் உள்ள இடம், இயற்கை, மரங்கள், விலங்குகளைப் பாதுகாப்பது தங்கள் நோக்கம் என்றும் முரா பழங்குடியினர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

காலனி ஆதிக்கம், காடு அழிப்பு, ஊடுருவல், நோய்த் தொற்று என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு நீளும் தங்கள் தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும், உலகுக்கும் வனம் என்பது தேவையான ஒன்று என அழுத்தந்திருத்தமாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அமேசானில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி லண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன் பழங்குடியினர் போராட்டங்களை நடத்தினர்.

அமேசானில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, இயற்கை ஆர்வலர்களோடு பழங்குடியினர்களையும் போர்க்கொடி உயர்த்தச் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் சர்வதேச அழுத்தம் அதிகரித்த நிலையில் அன்னிய சக்திகள் இதில் தலையிட வேண்டாம் என பிரேசில் அதிபர் ஜெய் போல்சொனரோ கடந்த வியாழனன்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், அமேசானின் இயற்கைச் சூழலுக்கு ஆபத்து நேருவதை உடனடியாகத் தடுக்கக் கோரியும், பிரேசில் அதிபரைக் கண்டித்தும் லண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன்பாக ஹுனி குய்ன் கக்ஸினாவா ((Huni Kuin Kaxinawa)) என்ற பழங்குடியினர்கள் இசைக்கருவிகளை வாசித்து முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments