லண்டனில் அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து..!

0 211

லண்டனில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 12வது தளத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

லண்டனின் மேற்கு பகுதியில் உள்ளது கிரென்ஃபெல் டவர்.

இங்கு கடந்த 2017ம் ஆண்டு பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் கட்டிடத்தில் இருந்த 71 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில், இந்த டவர் அருகே இருந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 12வது தளத்தில் நேற்று திடீரென தீப்பற்றியது. பால்கனி மற்றும் ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியதை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி தீ அடுத்த தளத்துக்கும் பரவாமல் இருக்க 10 தீயணைப்பு வாகனத்துடன் வந்த சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ஸ்காட்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments