கோடியக்கரை கோயிலில் இருந்த சாமி சிலைகள் கொள்ளை - 5 பேர் கைது

0 185

நாகை மாவட்டத்தில் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்  5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

image

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பழமை வாய்ந்த கோடி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 14ம் தேதி இரவு உலோகத்தால் ஆன முருகன் வள்ளி தெய்வானை மற்றும் ஜம்பொன்னால் ஆன அம்மன் ஆகிய 4 சிலைகளை மர்மநபர்கள் கொள்ளை அடுத்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசார்  தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் திருக்குவளை அருகே ஒரு வீட்டில் சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் 4 சிலைகளையும் மீட்டனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக  உதயராஜன், லோகேஸ்வரன், சதாசிவம், பாண்டியன் மற்றும் கிருபாகரன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments