நேர்கொண்ட பார்வை சினிமா போல சம்பவம்..! மாணவியை மீட்ட பொதுமக்கள்

0 1095

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கடுமையாக சாடியுள்ள நடிகர் அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்ற பாலியல் அத்துமீறல் காட்சி போல, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழைப் பள்ளி மாணவி ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது. வசதி படைத்த மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. 

அஜீத்குமாரின் நேர்கொண்ட பார்வை திரை படத்தில் 3 ஆண் நண்பர்களிடம் ஒரு பெண் சிக்கிக் கொள்ள , எந்த பெண்ணாக இருந்தாலும் சரி வேண்டாம் என்றால் தொடக்கூடாது என்ற கருத்தை உரக்க சொல்லி இருப்பார்கள்..! அதே பாணியில் 3 ஆண் நண்பர்களை நம்பிச்சென்ற ஒரு மாணவி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது..!

அங்குள்ள மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் கடந்த 20 ந்தேதி இரவு நீண்ட நேரம் அழுதபடி பள்ளி மாணவி ஒருவர் அமர்ந்திருந்தார். பேருந்துக்காக காத்திருந்த சில பயணிகள் அந்த மாணவியிடம் விசாரித்த போது தனக்கு வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவிப்பதாக தெரிவித்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவியை மீட்டு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், ஆண்நட்பு என்ற மாயவலையில் சிக்கி படிக்கின்ற வயதில் மூன்று ஆண் நண்பர்களிடம் சிக்கி சீரழிந்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஏழை கூலிதொழிலாளி ஒருவரின் மகளான இந்த மாணவி, வீட்டில் உள்ள 3 பெண்குழந்தைகளில் மூத்தவர் என்று கூறப்படுகின்றது. அங்குள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர் தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். பேருந்து பயணத்தின் போது அங்குள்ள பிரண்ட்ஸ் ஐடிஐ ல் படிக்கின்ற இரு மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வசதியான வீட்டு பிள்ளைகளான அந்த இரு மாணவர்களின் ஒருவர் இதனை சாதகமாக வைத்து மாணவியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். ஒரு முறை பிறந்த நாள் விருந்து தருவதாக வீட்டிற்கு அழைத்து சென்று மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்வத்தை அறிந்த மற்றொரு மாணவனும் மாணவியை மிரட்டி அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளான்.

தங்களிடம் இப்படி ஒரு அப்பாவி மாணவி சிக்கியுள்ள தகவலை வசதியான வீட்டு பிள்ளையான லியோ பிராங்க்ளின் என்பவரிடம் தெரிவித்த மாணவர்கள் லியோ பிராங்கிளினுக்கும் அந்த மாணவியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர். இதையடுத்து லியோ பிராங்கிளினும் மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

கடந்த 20 ந்தேதி பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவியை சந்தித்த பிராங்கிளின், தனது வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி திப்பிறமலை அடர்ந்த காட்டு பகுதிக்கு ஏமாற்றி அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது. அங்கு வைத்து மாணவி வேண்டாம், என்று மறுத்தபோதும், லியோ பிராங்கிளின் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக அந்த மாணவி புகாரில் தெரிவித்தார். மேலும் இதை வெளியில் சொன்னால் உன்குடும்பத்திற்கும் தங்கைகளுக்கும் தான் அசிங்கம் என்று மிரட்டி மார்த்தாண்டாம் பேருந்து நிலையத்தில் லியோ பிராங்கிளின் இறக்கி விட்டு சென்றுவிட்டதால் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் விரக்தி மன நிலையில் அங்கேயே தவித்ததாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 3 நாட்களாக விரிவான விசாரணை நடத்தி லியோ பிராங்க்ளின் மற்றும் இரு ஐடிஐ மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர். லியோ பிராங்கிளினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரு மாணவர்களும் 17 வயதுடையவர்கள் என்பதால் அவர்களின் பெயரை வெளியிட வில்லை. அவர்கள் சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஏழை மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கில் குற்றவாளிகள் தப்பால் இருக்க உடனடியாக பலாத்கார வழக்கு பதிவு செய்வதுடன் மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தி கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க என்று மாநில சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப்பாளர் பிரபா கோரிக்கை விடுத்துள்ளார்

பெண்கள் வேண்டாம் என்றால் வேண்டாம் ..! என்பதை சுய ஒழுக்கத்துடன் உணராத ஆண்கள் உள்ளவரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை என்பதே கசப்பான உண்மை..! 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments