மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து

0 354

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபதுக்குள்ளானது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த வாரம் மேகவெடிப்பு ஏற்பட்டது போல் பெய்த கனமழையால், அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடும் பாதிப்புகளை சந்தித்த அரகோட் அடுத்த டிகோச்சி பகுதியில், மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அதனுள் இருந்த விமானியும், துணை விமானியும் லேசான காயங்களுடம் உயிர்தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து குறித்த தகவலை, உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சௌகான் ((Ashish Chauhan)) உறுதி செய்துள்ளார். கடந்த 21ம் தேதி கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். இந்நிலையில் உத்தரகாசி மாவட்டத்தில் மீண்டும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments