அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வேகமாகப் பரவும் காட்டுத் தீ

0 221

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயானது அதிவேகமாகப் பரவி வருவதால் சுமார் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு கலியபோர்னியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 89 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அந்நாட்டு நேரப்படி வியாழனன்று பிற்பகலில் சாஸ்டா கவுன்டியில் உள்ள பெல்லா விஸ்டா என்ற நகருக்கு அருகே உள்ள வனத்தில் தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், இரண்டே மணி நேரத்தில் 600 ஏக்கர் வனப்பரப்பை காட்டுத் தீ நாசமாக்கியது. வெப்பமும் கொளுத்திய நிலையில், காட்டுத் தீயின் கணிக்கப்பட்ட பாதையில் உள்ள ஆயிரத்து 100 வீடுகளை விட்டு 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிற இடங்களில் உள்ளவர்கள் வெளியேறத் தயாராக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்டதைப் போன்றே இந்த ஆண்டும் காட்டுத் தீயானது பலத்த சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்படுவதால் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments