கொள்ளிடத்தில் புதிய பாலப் பணிகள் 2021ம் ஆண்டுக்குள் நிறைவுறும் - வருவாய்த்துறை ஆணையர்

0 246

திருச்சி முக்கொம்பில் நடைபெற்று வரும் அணை கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்தியகோபால், கொள்ளிடம் புதிய பாலப் பணிகள் வரும் 2021ல் நிறைவுபெறும் என்றார்.

திருச்சி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 12.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 88 பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்தபின் முக்கொம்பு கொள்ளிடம் புதிய பாலத்தின் கட்டுமான பணிகளை சத்தியகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கொம்பு தற்காலிக தடுப்பணை, 2 லட்சம் கன அடி நீர் வந்தாலும் தாங்கும் அளவிற்கு வலிமையாக அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதேபோல் தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்திட உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments