செல்போனில் பேசிக்கொண்டே ரயில் பாதையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபரீதம்

0 5460

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இளம் பெண் ஒருவர் செல்போனில் பேசியபடியே ரயில் பாதையை கடக்க முயன்ற போது, அப்பகுதி வழியாக வந்த அதிவிரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவருக்கு வருகிற செபடம்பர் மாதம் 1ந் தேதி குடும்பத்தினரால் திருமணம் நிச்சயமிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ஜான்சி ராணி, கம்பெனிக்கு செல்லும் வழியிலுள்ள சென்னை - திருச்சி ரயில் பாதையை செல்போனில் பேசிக்கொண்டே கடக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்த அதிவிரைவு ரயில் ஜான்சிராணி மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட ஜான்சிராணி சம்பவ இடத்திலேயே உயிரிழிந்துள்ளார்.

திருமணமாவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ரயில் விபத்தில் சிக்கி ஜான்சி ராணி உயிரிழந்திருப்பது அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து செங்கல்பட்டு இருப்புப் பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments