பள்ளி குழந்தைகள் கடத்தல்..!

0 1963

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற அக்கா, தம்பி கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு அடுத்த ஏரிமேடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வீரன் என்பவரின் மகள் தனுஸ்ரீ, மகன் அருண் ஆகிய இருவரும் அனுப்பம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை குழந்தைகள் இருவரும் வழக்கம் போல பள்ளிக்கு செல்லும் போது அவ்வழியே வந்த இளைஞன் ஒருவன் பள்ளியில் இறக்கி விடுவதாக கூறி அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளான்.

இதனை அடுத்து அவர்களை ஏற்றி கொண்ட வாகனம் பள்ளியை தாண்டி செல்வதை கண்ட பிற மாணவர்கள் ஆசிரியரிடம் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் குழந்தைகள் கடத்தப்பட்டது குறித்து பெற்றோருக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசாரும், கிராம இளைஞர்களும் நாலாபுறமும் தங்களின் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அந்த இரு குழந்தைகளையும்  இருசக்கர வாகனத்தில் வைத்து சுற்றித் திரிந்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அந்த இரு குழந்தைகளும் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். 

போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞன் கேசவபுரம் கிராமத்தை சேர்ந்த சுகுமார் என்பது தெரிய வந்தது.  மேலும் கஞ்சா போதையில் இருப்பதால்  குழந்தைகள் இருவரையும் கடத்தும் நோக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வைத்து சுற்றித் திரிந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments