தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை..!

0 842

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, வெள்ளைகேட், பொன்னேரிகரை, வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments