போக்குவரத்து விதிமீறலுக்கு இ-சலானில் அபராதம் விதிக்கும் வசதி

0 635

திருவள்ளூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாததால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது இந்தாண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைப்போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் இ-சலான் இயந்திரங்கள் மூலம் அபராதம் வசூலிக்கும் திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார்.

பின்னர் திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் எஸ்.பி., அரவிந்தன் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது சாலை விதிமுறைகளை மீறியவர்களுக்கு மின்னணு இயந்திரத்தின் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி அரவிந்தன், திருவள்ளூரில் 21 இ-சலான் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி அபராத தொகையை பணமாக கொடுக்க வேண்டாம் என்றும் கூறினார். மேலும், இந்தாண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 7 ஆயிரம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments