2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது ? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

0 610

2020 ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அட்டவணையில் 2020ம் ஆண்டு மே 3 ம் தேதி நடைபெறும் நீட்தேர்வு முடிவுகள்  ஜூன் 4 ம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

டிசம்பர் 2ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்  நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பித்தவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். தனித்தேர்வர்கள் மற்றும் திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கடந்தாண்டில் 14.10 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,23,078 பேர் எழுதிய நீட் தேர்வில், 59,785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments