நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அழகிய சம்பவம்

0 432

நியூசிலாந்தில் எம்.பி.யின் குழந்தை அழுததால் சபாநாயகர் பால் புகட்டி சமாதானப்படுத்தியபடி அவையை நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று நியூசிலாந்து பிரதிநிதிகள் சபையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது லேபர் கட்சி எம்.பி. தமதி காஃபியின் வாடகைத்தாய் மூலம் பிறந்த ஒரு மாதமேத ஆன குழந்தை அழத் தொடங்கியது. குழந்தைகளின் மீது அலாதியான பிரியம் கொண்ட பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட் (Trevor Mallard) குழந்தையை வாங்கிக் கொண்டார்.

குழந்தைக்கு ஒரு புட்டி பால் கொடுத்து, அது சிணுங்கும்போது கையில் வைத்து தாலாட்டிக் கொண்டே அவர் அவையை நடத்தினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கென்யாவில் குழந்தையோடு நாடாளுமன்றம் வந்த பெண் எம்.பி. அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், நியூசிலாந்து சபாநாயகரின் இந்த கனிவான நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். ஏற்கெனவே 2017-ம் ஆண்டு நியூசிலாந்து சபாநாயகர் இதேபோல் ஒரு எம்.பி.யின் குழந்தையை சீராட்டிய காட்சிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments