அன்று கஞ்சா வியாபாரி - இன்று உப்பு வியாபாரி..!

0 283

துரையில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த நபருக்கு அறிவுரைகள் கூறி, அவரை உப்பு வியாபாரியாக மாற்றியுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர்.

மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் இப்ராஹிம்ஷா.

இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் 7 கஞ்சா வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல கஞ்சா விற்பனை செய்து வந்தபோது, திலகர் திடல் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் பிளவர்ஷீலாவிடம் சிக்கியுள்ளார் இப்ராஹிம்ஷா.

அவரிடம் நடத்திய விசாரணையின்போது, திருந்தி வாழ விரும்புவதாகவும் ஆனால் அதற்கான வழிகாட்டுதலோ, பொருளாதார பின்னணியோ இல்லை என அவர் கூறியதாகத் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவருக்கு சைக்கிள் ஒன்றையும் உப்பு மூட்டையையும் வாங்கிக் கொடுத்துள்ளார் பிளவர்ஷீலா. அன்றிலிருந்து உப்பு வியாபாரம் செய்துவருவதாகக் கூறும் இப்ராஹிம்ஷா, தினசரி வருமானம் குறித்து பொறுப்பாக காவல் ஆய்வாளரிடம் கணக்கு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

வயிற்றுப் பிழைப்புக்காக வழிமாறிச் செல்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால், திருந்தி வாழ்வார்கள் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments