ப.சிதம்பரம் பக்கம் தவறு இருப்பதால்தான் தலைமறைவாக இருக்கிறார்

0 483

ப.சிதம்பரம் தவறு செய்திருப்பதால்தான் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ப.சிதம்பரம் விவகாரத்தில் சட்டம் தன் கடைமையை செய்கிறது எனவும், ப.சிதம்பரம் தலைமறைவாக இருப்பது அவரது வாழ்க்கையில் ஒரு கருப்பு புள்ளியைத்தான் ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார். வழக்கை சட்ட ரீதியாக அணுகுகிறார் என்றால் ஏன் அவர் யாருடனும் தொடர்பு இல்லாமல் இருக்கிறார் எனக் கேள்வி எழுப்பிய அவர், சிதம்பரத்தை கைது செய்யும் நோக்கில் யாரும் அவர் வீட்டுக்குச் செல்லவில்லை எனவும், விசாரணைக்காகவே சென்றதாகவும் தெரிவித்தார்.

விசாரணைக்கு வராததால்தான் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சிதம்பரம் நடந்துகொள்ளும் விதமே அவர் மீது தவறு இருப்பதை வெளிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments