99 வயதான போதும் டேங்கோ நடனப் போட்டியில் பங்கேற்ற முதியவர்

0 371

99 வயதானபோதும் டேங்கோ நடனப் போட்டியில் பங்கேற்ற இரண்டாம் உலகப் போர் வீரர், கனவுகளை நனவாக்க வயது ஒரு தடையில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

ஸ்காட்லேண்டில் பிறந்த மேன்மானுஸ் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த வீரர் ஆவார். எலக்ட்ரீசியன் தொழில் செய்து ஓய்வு பெற்ற அவர் வரும் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த 25 ஆண்டுகளாக விமானமே ஏறாத அவருக்கு 100-வது பிறந்தநாள் பரிசாக மெக்மானுசின் கனவை நிறைவேற்ற அவரது நண்பர்கள் அர்ஜென்டினாவுக்கு விமான டிக்கெட் எடுத்துத் தந்தனர்.

2002 முதல் டேங்கோ நடனத்தின் மீது கொண்ட காதலால் அதைக் கற்றுக்கொண்டதோடு, தன்னுடன் வகுப்புக்கு வந்த பெண்ணோடு அவர் அர்ஜென்டீன தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடத்தப்பட்ட டேங்கோ சேம்பியன்சிப் போட்டியில் பங்கேற்று நடனமாடினார்.


99 வயதான போதும், நடனத்தின் மீதான தன் கனவை நிறைவேற்றிக் கொண்ட மெக்மானுஸ், கனவுகளுக்கு வயது தடையில்லை என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments