கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0 292

கர்நாடகாவில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கெலரவப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 44.28 அடி மொத்த கொள்ளளவு கொண்ட கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் தற்போது 41.82 அடியாக உள்ளது. விநாடிக்கு 568 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது விநாடிக்கு 762 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதாலும், பாதுகாப்பு கருதியும் அணையில் இருந்து விநாடிக்கு 640 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments