10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பார்லே பிஸ்கட் நிறுவனம் முடிவு?

0 871

நாட்டின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, 10,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்லே ஜி, மொனாகோ, மிலானோ, ஹைட் அண்ட் சீக் (Parle-G, Monaco, Milano, Hide and Seek) ஆகிய பிஸ்கட்டுகளை தயாரிக்கும் பார்லே நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதன் ஆண்டு வருவாய் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், முன்பு பிஸ்கட்டுக்கு, 5 முதல் 12 விழுக்காடு வரையிலான வரி, ஜி.எஸ்.டி-யின் கீழ் 18 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக விலை அதிகரித்து விற்பனையில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக பார்லே நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 6 மாத காலமாகவே விற்பனை மந்தமாகி இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே வரியை மீண்டும் 12 விழுக்காடு அளவுக்கு குறைக்குமாறு மத்திய அரசை அந்த நிறுவனம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் உற்பத்தியைக் குறைப்பதுடன், 8,000 முதல் 10,000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று பார்லே புராடக்ட்ஸ் பகுப்பு தலைவர் மயங்க் ஷா கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments