அரசு பேருந்து பணிமனை மெக்கானிக் தலையில் கல்லைப் போட்டு கொலை

0 1261

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரசு பேருந்து பணிமனை மெக்கானிக் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டு உடல் சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேட்டுபட்டியில் உள்ள முல்லை பெரியாறு பாசன கிளை கால்வாய் அருகே ரத்த காயங்களுடன் தலை நசுங்கிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

கொலை செய்யப்பட்டது அதே பகுதியை சேர்ந்த பெரியணன் என்பதும், அவர் பசுமலை அரசு பேருந்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு இரவு தூங்கச் சென்ற பெரியணன், கொலை செய்யப்பட்டு உடல் சாக்கு மூட்டையில் கட்டி அருகே உள்ள கால்வாயில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments