புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விபத்து

0 144

கோவை பீளமேட்டில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 6 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான சி.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் சேலாக மழை பெய்து வந்த நிலையில், 20க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தின் பக்கவாட்டு சுவர்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென பிடிப்புதன்மை இழந்த காரணத்தால் இரும்பு சாரமும் சுவரும் சேர்ந்து சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய பீகார் மாநிலத்தை சேர்ந்த 6 வடமாநில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments