எஸ்.பி.ஐ. வங்கி கார் லோன் செயலாக்கக் கட்டணம் தள்ளுபடி

0 1156

விழாக்கால சலுகையாக கார் லோன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதோடு பல கடன் சார்ந்த சலுகைகளையும் எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த கடன் வட்டி விகிதமாக 8 புள்ளி 7 பூஜ்ஜியம் சதவீதத்தில் கார் கடன் வழங்குவதாகவும், வட்டி அதிகரிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. எஸ்.பி.ஐ.யின் டிஜிட்டல் தளங்களான யோனோ செயலி அல்லது வங்கி இணையதளத்தில் கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது வட்டி மதிப்பில் 25 அடிப்படைப் புள்ளிகள் சலுகை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

காரின் ஆன் ரோடு விலையில் 90 சதவீதம் வரை சம்பளதாரர்கள் கடனாகப் பெற முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு யோனோ மூலம் நான்கே கிளிக்கில் 5 லட்சம் ரூபாய் வரை முன்-ஒப்புதல் டிஜிட்டல் கடன்கள் வழங்குவதாகக் கூறியுள்ளது.

கல்விக் கடனுக்கு ஈர்க்கத்தக்க வகையில் 8.25 சதவீதம் வட்டியுடன் 50 லட்சம் வரையும், இந்தியா அல்லது வெளிநாடுகளில் படிக்க ஒன்றரை கோடி வரையிலும் கடன் வழங்குவதாகக் கூறியுள்ள எஸ்.பி.ஐ வங்கி, அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 15 ஆண்டுகள் என்றும் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய வீட்டுக்கடன் 8.05 சதவீதத்தில் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments