100 ரூபாய் கடனைத் திருப்பித்தராத நபரை கல்லால் அடித்து கொலை செய்த நபர்

0 1251

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில், 100 ரூபாய் கடனைத் திருப்பித்தராத நபரை, கடன் கொடுத்த நபர் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.

மேல்மலையனூரில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் கருடன் கிழங்கு உள்ளிட்டவற்றைக்கொண்டு பக்தர்கள் திருஷ்டி கழிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தனசேகர் மற்றும் வடபாலை பகுதியை சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரும் இணைந்து அங்கு கருடன் கிழங்கு வியாபாரம் செய்துவந்துள்ளனர்.

வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை இருவரும் பங்கிட்டுவந்த வகையில், தனசேகருக்கு முருகேசன் 100 ரூபாய் கடன் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மேல்மலையனூர் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குடி போதையில் படுத்திருந்த முருகேசனிடம் குடிபோதையில் இருந்த தனசேகர் வந்து தனக்கு தரவேண்டிய 100 ரூபாயை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த தனசேகர் அங்கு கிடந்த கற்களை எடுத்து முருகேசனின் தலை, கால், வாய் பகுதிகளில் பலமாக தாக்கியுள்ளார். இதில் முருகேசன் படுகாயமடைந்ததையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து விசாரணை செய்த போலீசார், தனசேகரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 100 ரூபாய் பணத்திற்காக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments