மக்களை அச்சுறுத்திவரும் இரு காட்டு யானைகளை பிடிக்க முயற்சி

0 135

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில், போதிய வெளிச்சமின்றி மேகமூட்டமாக இருப்பதால், மக்களை அச்சுறுத்திவரும் இரு காட்டு யானைகளை, பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக வனப்பகுதியில் இருந்து இரு காட்டு யானைகள் வெளியேறி, ஓசூர் பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், கிராமங்களுக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. கொம்பன், மார்க் என்ற அந்த இரு யானைகளில், கொம்பன் யானை தாக்கியதில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், 2 யானைகளைப் பிடித்து முதுமலை முகாம் கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக மாரியப்பன், பரணி என்ற இரு கும்கி யானைகளை ஆனைமலை மற்றும் முதுமலையிலிருந்து, ஓசூர் வனப்பகுதிக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதனிடையே கெலவரபள்ளி அணை பகுதியில் இருந்த இரு காட்டு யானைகளும், மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கு வசதியாக அங்கிருந்து பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்டு உள்ளன. அப்பகுதியில் மேகமூட்டமாக இருப்பதால், போதிய வெளிச்சம் இல்லாமல், கும்கி யானைகள் மூலம் அவற்றை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments