திருட முயன்ற இளைஞரை புரட்டியெடுத்த முதியவர்..!

0 292

சேலம் அரிசிபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றதாகக் கூறப்படும் இளைஞரை, முதியவர் ஒருவர் தடுத்து தாக்கும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சேலம் மாநகர் அரிசிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், அதிகாலை 1 மணியளவில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அரிசிபாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை நோட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், அந்த நபரைக் கண்டு அவரிடம் விசாரிக்க முயன்றுள்ளார். முதியவரை பார்த்து அச்சமடைந்த இளைஞர் தான் வந்த பைக்கில் ஏறி தப்ப முயன்றுள்ளார்.

இதையடுத்து இளைஞரை துரத்திச் சென்று பிடித்து கீழே தள்ளிய முதியவர், அவருடன் சண்டையிட்டு அக்கம்பத்தினர் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார். இதுதொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அந்த நபரை அழைத்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments