நீலகிரியில் காட்டெருமைக் கூட்டத்தை கண்டு மக்கள் அச்சம்..!

0 256

நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வருவது அப்பகுதியில் வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி தந்தநாடு' பகுதியில் அதிகளவில் பேரிக்காய்கள் காய்த்து கொத்துக் கொத்தாக மரத்தில் தொங்குகிறது.

இதனை சாப்பிடுவதற்காக அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டெருமைக் கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் தேயிலை பறிக்க செல்லாமல் அச்சத்துடன் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

இந்த காட்டெருமைகள் மனிதர்களை தாக்கும் முன்பு அதனை வனப்பகுதியில் விரட்டி விடவேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments