காவல் ஆய்வாளருக்கு எதிராக பிடியாணை..!

0 681

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத வேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்துவார்ச்சேரி ரேஷன் கடை பொருட்களை திருடியதாக சித்ரா என்பவர் மீது வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவர் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த சித்ரா வழக்கறிஞர்கள் ஸ்டான்லிஜான், புகழேந்தி உள்ளிட்ட சிலருடன் ராமதாஸ் மற்றும் அவரது மனைவியை தாக்கினார் என்பது புகாராகும்.

இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், 3 மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை அளிக்க கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஏழு மாதங்கள் ஆகியும் இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என கூறி வேலூர் சத்துவாச்சேரி ஆய்வாளருக்கு எதிராக ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,ஏற்கனவே இரண்டு முறை உத்தரவிட்டும் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிணையில் வெளி வரக்கூடிய பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும் வருகிற 22-ம் தேதிக்குள் ஆய்வாளரை நேரில் ஆஜர்படுத்த வேலூர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments