ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெறும்- பொன்.ராதாகிருஷ்ணன்

0 631

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் தற்காலிகமானதுதான் எனவும் அத்துறை விரைவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெறவில்லை எனத் தெரிவித்த அவர், பாஜக அங்கம் வகிக்கும் கட்சிதான் அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.

ஆவின் பால் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த விலையேற்றமும் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் எனவும், அதே நேரம் உற்பத்தியாளர்களுக்கும் உரிய விலை வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments