ஜம்முவில் டாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவரை விமானப்படை மீட்டனர் ..!

0 1162

ஜம்மு அருகே டாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த மீனவர்கள் 4 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் டாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ஜம்மு அருகே தாவி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலப்பகுதியில் 4 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர் விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் அங்கு சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

இது குறித்து பேசிய தெற்கு ஜம்மு பகுதியின் சார் ஆட்சியர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், மாநில போலீசார், விமானப்படையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த மீட்புப் பணியை விரைந்து செயல்பட்டு வெற்றிகரமாக முடித்ததாகக் கூறினார்.

மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் எனத் தெரிவித்த அவர், மீட்பு பணிக்கு பின்னர் அப்பகுதி கிராம மக்களை ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments