தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ச்சி

0 245

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆடல், பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இருசக்கர வாகனம் ஓட்டுவோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி பல்வேறு விதமாக அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பூக்கடை போக்குவரத்து போலீசார் சார்பில், எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு ஆடல், பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில், பல்வேறு சினிமா பாடல்களுக்கு நடனமாடிய குழுவினர், முடிவில் தலைக்கவசம் அணிந்தும் நடன அசைவுகளை வெளிப்படுத்தினர். 

இதை அடுத்து அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் பேசிய போலீசார், அன்றாடம் வீட்டை விட்டு புறப்படும் போது செல்போன் இருக்கிறதா? என்று உறுதி செய்வதைப் போல் தலைக்கவசத்தையும் மறக்காமல் அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments