சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்

0 391

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து திட்டமிட்டபடி செப்டம்பர் 7 ஆம் தேதி லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந்தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த புதன்கிழமை புவியின் சுற்றுவட்டப் பாதையில் இறுதிகட்ட நிலை உயர்வுக்கு விண்கலம் நகர்த்தப்பட்டது.

தொடர்ந்து வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணிக்கும் விண்கலம் வரும் 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும். அப்போது விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் இயங்க வைக்கப்பட்டு நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைக்கப்படும்.

நிலவின் பரப்பில் இருந்து குறைந்த பட்சம் 118 கிலோ மீட்டர் தொலைவையும், அதிகபட்சம் 18,078 கிலோ மீட்டர் தொலைவையும் கொண்ட நீள் வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும்.

இதுவரை சிறப்பாக பயணம் நடந்து கொண்டிருக்கிறது என்று இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் செப்டம்பர் 7-ந்தேதி லேண்டர் நிலவில் இறங்க உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments