வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி

0 537

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2வயது குழந்தையின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதி  உதவியினை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

சேதம் ஏற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை நேரில் அவர் பார்வையிட்டார். 

அதன்பின்னர் சிறுமியை இழந்த குஞ்சப்பன் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் காசோலையும் மற்ற 25 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் வேலுமணி  வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், சேதமடைந்த கால்வாய் மற்ற பகுதிகளில்  அரசு உடனடியாக கவனம் செலுத்தி பணிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கப்படும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments