திருமண மண்டபத்தில் குண்டுவெடித்து 63 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில், 63 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. காபூல் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்றிரவு களைகட்டியிருந்தது.
நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த அந்த திருமண மண்டபத்தில், யாருக்கும் சந்தேகம் எழாதபடி நுழைந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவன், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கிறான்.
இந்த கொடூரமான தாக்குதலில் சிக்கி, திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில், 63 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 182 பேர் படுகாயமடைந்தனர்.
ஆண் விருந்தினர்கள், பெண் விருந்தினர்கள் தனித்தனியாக அமர்ந்திருந்த நிலையில், ஆண் விருந்தினர் பகுதிக்குள் நுழைந்து, தற்கொலைப் படை தீவிரவாதி, வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறான். இந்த கொடூர தாக்குதலுக்கு, ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
காபூல் தாக்குதலுக்கு தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தலீபான் தீவிரவாத இயக்கம் அறிவித்த நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றிருக்கிறது.
அமெரிக்காவோடு தலிபான் தீவிரவாத இயக்கத்தினர், அமைதி பேச்சுவார்த்தைக்கான சூழலை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், காபூலில் கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
Comments