டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

0 555

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரெனப் பற்றிய தீயால் 3 தளங்களில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டபோதும், நூற்றுக்கணக்கான நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

டெல்லி ஏய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5 மணியளவில் தீப்பிடித்தது. முதல்தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பற்றிய தீ மளமளவென வேகமாக எரிந்தது. இதனால் தீ 5வது மாடி வரை எட்டியது. அங்கிருந்த நோயாளிகள் யாவரும் மிகுந்த பாதுகாப்புடன் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

தீயை அணைப்பதற்கு 34 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு நோயாளிகள் மீட்கப்பட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் நீர் பாய்ச்சப்பட்டு தீயால் ஏற்பட்ட புகையைப் போக்கவும் வெப்பத்தைத் தணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விபத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அப்புறப்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் இன்று மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீவிபத்தில் மருத்துவமனை சாதனங்கள், மருந்துகள், மாதிரி ரத்த பரிசோதனைகள் உள்பட ஏராளமான பொருட்களும் ஆவணங்களும் கருகி விட்டன. தீவிபத்துக்கு மின்கசிவுதான் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தாலும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் தீயணைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு நோயாளிகளின் உடல் நலத்தை கண்காணிக்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments