அத்திவரதர் ஜலசயனம் செய்யும் குளத்துக்கு 2 மாதங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

0 965

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் ஜலசயனம் செய்யும் குளத்துக்கு 2 மாதங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும் தரிசனத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றுவது உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் 15 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறினார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே 46 வது நாள் முடிவில் உண்டியல் காணிக்கை 8 கோடியே 33 லட்சத்து 54 ஆயிரத்து 698 ரூபாயாக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 47 வது நாள் முடிவில் அது ஒன்பது கோடி ரூபாயை தாண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 46 வது நாள் முடிவில் காணிக்கையாக தங்கம் 136 கிராமும், வெள்ளி 627 கிராமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


  • msdh

    om namo Narayan namaka