மின்கம்பியை திருடும்போது மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழப்பு

0 473

கோவை மாநகராட்சியில் மின்கம்பியை திருட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து 50 வயது முதியவர் உயிரிழந்தார். சுப்பிரமணியம்பாளையம் ஜல்லிகோரை என்ற இடத்தில் மின்கம்பத்தில் இருந்து வரும் கம்பிகளை வெட்டி எடுக்க முதியவர் ஒருவர் முயன்றுள்ளார்.

அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் பூம்புகார் நகரைச் சேர்ந்த ஐயாசாமி என்பதும் இருவருக்கு மகன் மற்றும் மகள் இருப்பதும் குடிப்பழகத்திற்கு அடிமையான இவர் தனது தாயுடன் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மின்கம்பியை திருடும்போது ஐயாசாமியின் அருகில் நின்றிருந்த நாய் ஒன்று மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அந்த நாயும் உயிரிழந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments