கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் - ஈஸ்வரன்

கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சித்திட்டங்களை வேகப்படுத்த முடியும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபியை தனி மாவட்டமாக்குவதற்கு தான் கோரிக்கை வைப்பதாக, அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை பிரித்து கொண்டிருக்கிறார்களே அங்கெல்லாம் 100 ஏக்கர் நிலம் பெற்றுக்கொண்டு தான் பிரித்தார்களா ? எனவும் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு மாவட்டத்தை பிரிப்பதற்கும், ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கும் 100 ஏக்கர் நிலம் எதற்கு என அமைச்சர் விளக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சித்திட்டங்களை வேகப்படுத்த முடியும் என்றும் அந்தந்த மாவட்டத்தில் மூடப்பட்டு கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை காப்பாற்றி வேலை இழப்புகளையும் தவிர்க்க முடியும் என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
Comments