சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து

0 2985

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே ஆம்னி பேருந்து ஒன்று சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொறியியல் பட்டதாரி பெண் பலியானார். தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று சென்னைக்கு புறப்பட்டுள்ளது.

அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், அதனை பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் ராஜா இயக்கி உள்ளார். அந்த பேருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் வடலூர் சத்தியஞான சபை அருகில் வேகமாக வந்தபோது சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட போது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஹரிணி என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. 

பேருந்தின் ஓட்டுநர் உட்பட படுகாயம் அடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் உயிரிழந்த ஹரிணி கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனின் உறவினர் என்று கூறப்படுகிறது. இந்த விபத்துக்குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments