பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியே செல்லும் 11 ரயில்கள் ரத்து

0 396

பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியே செல்லும் 11ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேலம் ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஈரோடு ரயில் நிலைய யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி, சிக்னல் மற்றும் மின் வழித்தட பராமரிப்பு போன்றவை மேற்கொள்ளப்படுவதால் கோவை - சென்னை வாராந்திர ரயில் இன்றும், சென்னை - கோவை வாராந்திர ரயில் வரும் 18-ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை - கோவை இடையிலான இன்டர்சிட்டி ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு- ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் மற்றும் பேஸஞ்சர் ரயில் ஆகியவை 17ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

ஜோலார்பேட்டை- ஈரோடு பாசஞ்சர் ரயில் 17ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதே போன்று ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு ஒரு பகுதியாக ஈரோடு - சேலம் இடையே ரத்து செய்யப்பட்டு சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்லும்.

மறுமார்க்கத்தில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18 ம் தேதி முதல் 20ம் தேதி வரை சேலம் - ஈரோடு இடையே ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments