தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு

0 790

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாகவும் உள்மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

இந்நிலையில் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மாலையில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments