மேட்டூர் அணையில் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது

0 1150

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கரூர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மாயனூர் கதவணையை வந்தடைந்துள்ளது.

தற்போது விநாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி அருகே உள்ள கல்லணையில் தண்ணீர் மொத்தமாக சேர்ந்தவுடன், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments