ரூ.100 கொடுக்காமல் செல்பி எடுக்க முற்பட்ட நபரை திருப்பி அனுப்பிய வைகோ

0 2307

வேலூர் மாவட்டம் ஆம்பூரில், தன்னுடன் சேர்ந்து செல்பி எடுக்க பணம் தராதவரை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்சியினர் யாரும் சால்வை அணிவிக்கக் கூடாது என்றும், அதற்கு பதிலாக அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஆம்பூர் வழியாக வைகோ சென்றார். வைகோவின் கார் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது பட்டாசு வெடித்து கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், காரை விட்டு வைகோ கீழே இறங்கியதும் கட்சியினர் ஒவ்வொருவரும் அவரிடம் 100 ரூபாய் கொடுத்து விட்டு செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது, பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ஒருவர் ஓடி வந்து வைகோவுடன் புகைப்படம் எடுக்க தயாரானார்.

அவரை கட்சி தொண்டர் என்று எண்ணிய வைகோ பணம் கேட்டார். ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதும், வைகோ அவரை திருப்பியனுப்பினார். இதனால் ஏமாற்றமடைந்த அந்த நபர் விரக்தியுடன் திரும்பி சென்றார்.

இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கிடையே சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வரை சென்ற வைகோ ஆங்காங்கே நின்று கட்சியினரை சந்தித்து பணத்தை பெற்றுக்கொண்டு செல்ஃபி எடுத்த வகையில் கட்சி நிதியாக ஒரே நாளில் 53 ஆயிரம் ரூபாய் வசூலானதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments