நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கோலாகலக் கொண்டாட்டம்

0 368

நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது . டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்.

நாடு முழுவதும் இன்று 73வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி காலை 7மணியளவில் மகாத்மாகாந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் செங்கோட்டையின் லாஹோரி கேட் வழியாக சென்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி மூவர்ணக் கொடி ஏற்றுகிறார். சுமார் 96 நிமிடங்களுக்கு மோடி உரை நிகழ்த்த உள்ளதாகவும் இந்த உரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் உள்ளிட்ட இணையதளங்களிலும் இதனைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா இன்டபென்டன்ஸ் டே என்ற தேடுதல் மூலம் மொபைல்களிலும் அதனை காணலாம். பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலும் அவருடைய பேச்சு இடம் பெறுகிறது.சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர் காலை 10 மணிக்கு பிரதமர் தமது இல்லத்தில் ரக்சா பந்தன் பண்டிகையை கொண்டாட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments