நாளை மாலையுடன் நிறைவடையவுள்ள அத்திவரதர் தரிசனம்..!

0 505

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்று ஒரேநாளில் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிக பக்தர்கள் திரண்டனர்.

46-வது நாளான இன்று அத்திவரதருக்கு பச்சை மற்றும் வெள்ளை நிற பட்டாலும், மலர்களாலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை முதல் பிற்பகல் 3 மணிவரை 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் மேலும் 3 லட்சம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 3 மணிக்கு பொது தரிசன வழியும், 2.30 மணிக்கு சிறப்பு தரிசன வழியும் அடைக்கப்பட்டது. இரு வரிசையிலும் கோவில் வளாகத்துக்குள் இருப்பவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணி முதல் 8 மணிவரை ஆடி கருட சேவை நடைபெறும் நிலையில் அதன் பிறகு பொது தரிசன வரிசையில் காத்திருப்பவர்கள் மட்டும் நள்ளிரவு வரை அத்திவரதர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இதன் பிறகு சிறப்பு வரிசைக்கு வருபவர்களுக்கு தரிசனத்துக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments