சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்

0 247

73-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டோருக்கு அவர் விருதுகளை வழங்குகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவிற்கு மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்கிறார்.

தொடர்ந்து, ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளை முதலமைச்சருக்கு அவர் அறிமுகம் செய்து வைப்பார். காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டபின், காலை 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றுகிறார். பின்னர் அங்கிருந்து மக்களுக்கு உரைநிகழ்த்துவார்.

பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்குஅப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, வீரதீரச் செயலுக்கான விருது ஆகியவற்றை முதலமைச்சர் வழங்குவார். தங்களது வீட்டில் நடைபெற இருந்த கொலை-கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்திய நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தம்பதிக்கு வீர தீரச் செயலுக்கான விருது வழங்கப்படுகிறது.

சென்னை பெருநகர காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வணிகவரிகள் துறை ஆகியவற்றுக்கு முதலமைச்சரின் நல் நல்ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது. சுதந்திர தின விழா நிகழ்ச்சியை விமர்சையாகக் கொண்டாட தலைமைச் செயலகம் அருகே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments