வீடில்லா இளைஞர் புகைப்பட கலைஞராக முன்னேறிய கதை முகநூலில் வைரல்

0 404

டெல்லி தெருவில் வசித்து முன்னேறிய புகைப்பட கலைஞர் ஒருவர், ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

பிரபல புகைப்பட கலைஞராக உருமாறியிருக்கும் விக்கி ராய் என்ற இளைஞர், தனது 11 வயதில் மும்பையில் வீட்டை விட்டு வெளியேறி பிழைப்புக்காக டெல்லி சென்றார். அங்கு  உணவு, தங்க இடமின்றி அவதிப்பட்ட அவர், ரயிலில் குடிநீர் விற்றும் உணவகத்தில் பாத்திரம் கழுவி அங்கு மீதமாகும் உணவை சாப்பிட்டும் வாழ்க்கையை ஓட்டியுள்ளார்.

அதன்பின் ‘சலாம் பாலக்’ தொண்டு நிறுவனத்தின் மூலம் காப்பகத்தில் தங்கி பள்ளி படிப்பை தொடர்ந்தார். அங்கு, தனக்கு அறிமுகமான பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் ஒருவரின் கலைப்படைப்பில் ஈர்க்கப்பட்டு, தெருவோர மக்களின் வாழ்க்கை சார்ந்த  புகைப்படங்களை எடுக்க விரும்பினார்.

ராயின் ஆர்வத்தை புரிந்து கொண்ட தொண்டு நிறுவனம், அவரது 18வது வயதில் சிறிய கேமராவை பரிசளித்து, கலைப்படைப்புக்கு வித்திட்டது.

அதன்பின் தனது லட்சியத்தை நோக்கி பயணித்த அவர்,  ‘ஸ்ட்ரீட் ட்ரீம்ஸ்' என்ற புகைப்பட கண்காட்சி நடத்தி, அதன் மூலம் பிரபலமாகி பல விருதுகளை குவித்தார்.  தற்போது உலக அளவில் பிரபலமாகியிருக்கும் விக்கி ராய், ஃபோர்ப்ஸ்  பத்திரிகையின் ‘30 வயதிற்குபட்ட 30 பிரபலங்களின்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments