கும்பல் வன்முறையில் அடித்து கொல்லப்பட்டவரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் விடுதலை

0 340

ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை கடத்தியதாக கூறி, கும்பல் வன்முறையில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

55 வயதான பெலுகான் (pehlu khan) என்பவர், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தனது இருமகன்களுடன் டிரக்கில் பசுக்களை ஏற்றிக் கொண்டு ஜெய்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு கொண்டு சென்றார்.

அப்போது இடைமறித்த பசுபாதுகாவலர்கள், இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த பெலுகான், ஏப்ரல் 4 ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக செல்போன் வீடியோ காட்சி அடிப்படையில் 6 பேர் கைது செய்யப்பட்டு பின்னல் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

கொலை மற்றும் சட்டவிரோதமாக பசுக்களை கொண்டு சென்றது தொடர்பாக மொத்தம் 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. கொலை செய்யப்பட்டவரின் இரு மகன்கள் உள்பட மொத்தம் 47 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியிலுள்ள நீதிமன்றம், இறுதி விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், சந்தேகத்தின் பலனை சாதகமாக வைத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும், விடுதலை செய்து தீர்ப்பளித்தது. செல்போன் வீடியோ ஆதாரத்தை ஏற்கவும் நீதிமன்றம் மறுத்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments