மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - காவிரி கரையோரப் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு

0 448

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையத்தில் காவிரி கரையோரப் பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

எனவே ஆற்று தண்ணீரால் கரையோரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள மண்டபங்களில் பொதுமக்கள் தங்க வேண்டும் என்றும், வெள்ளம் ஏற்பட்டால் 1077 என்ற இலவச எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments