நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

0 545

நீலகிரி , கோவை மாவட்டங்களில் அடுத்து இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரி கடல் பரப்பில் அதிக வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்மேற்கு பருவகாற்றின் தீவிரத்தால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார், இதே நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென அவர் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்ற அவர், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என்றார். இதே நேரத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். குமரிக்கடல் பரப்பில் அதிக வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தின் ஜூன் மாதம் முதல் நடப்பு மாதம் மாதம் வரை சராசரியாக 16 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 13 சென்டி மீட்டர் மட்டுமே பெய்துள்ளதாகவும், இது 18 சதவிகிதம் குறைவு என்றும் அவர் கூறினார். இதே நேரத்தில் சராசரியாக 23 சென்டி மீட்டர் மழையை பெறும் சென்னை, நடப்பு பருவமழை காலத்தில் 26 சென்டி மீட்டர் மழையை பெற்றுள்ளதாகவும், இது 12 சதவிகிதம் அதிகம் என்றும் புவியரசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments