"Jio Giga fiber" டிஜிட்டல் சேவையின் அடுத்த பரிணாமம்....

0 370

ஏறக்குறைய ஒரு வருடம் காத்திருந்து, ஜியோ இறுதியாக இந்தியாவில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது . இதில்  நாடு முழுவதும் இணையம் ,நிறுவனங்களுக்கு பிராட்பேண்ட் சேவை ,வீட்டுக்கு இணைய சேவை மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பிராட்பேண்ட் சேவை என  நான்கு புதிய இயந்திர சேவைகளை  அறிமுகப்படுத்தி வைத்தார் ஜியோ நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி.

”ஜியோ தி ஹீரோ”

image

ஜியோ இணைய சேவை வருவதற்கு முன்பு நாம் அனைவரும் எழுத்து வடிவ செய்திகளை தான் அதிகமாக பார்த்தும் படித்தும் கொண்டிருந்தோம். ஒரு மாதம் முழுக்க 1gb யை பயன்ப்படுத்தி கொண்டிருந்தோம். ஆனால் ஜியோ வந்த பிறகு அபரிவிதமான வளர்ச்சி இந்தியாவில் மட்டும் அல்லாது உலக நாடுகளிலும் இதன் தாக்கம் பெருமளவில் காணப்பட்டது.

ஜியோ சேவை தொடங்கி மூன்று ஆண்டுகளில் இணைய சேவையில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது ..
2016 செப். மாதம் தொடங்கப்பட்ட jio சேவை 3 வருடங்களில் 30 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் கொண்டு மிக பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கி வருகிறது...உலக அளவில் 2 ஆவது தொலை தொடர்பு நிறுவனமாகவும் இந்திய அளவில் மிக பெரிய நிறுவனமாகவும் வலம் வந்தது.

அப்படி இருக்கையில்  ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் அந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்..அதில் jio ஜிகா ஃபைபர் வருகின்ற செப். 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

Giga fiber சேவை என்றால் என்ன?

image

ஜிகா ஃபைபர் மூலம் நொடிக்கு 100mbps வேகத்தை பெற முடியும் . எளிமையாக சொல்ல வேண்டுமானால் இதுவரை நாளொன்றுக்கு  2 gb வரை பயன்படுத்திக்கொண்டிருக்கும் நாம் நொடிக்கு 1gb பயன்படுத்த முடியும்.

மேலும் உலக அளவில் unlimited calls பேசுவதற்கும் குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மாதந்தோறும் ரூ .500 செலுத்தினால் சர்வதேச அளவில் அளவில்லாமல் பேசும் திட்டம் அறிமுக படுத்தப்படுகிறது ..

2020 ஆண்டு ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தின் மூலம் புதிய திரைப்படங்களை அப்பொழுதே காணலாம் அதாவது புதிதாக ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை அன்றே ஜிகா ஃ பைபர் ப்ரீமியம் மூலம் காண முடியும் ..

ஜியோ ஜிகா ஃபைபர் யை எப்படி பெறுவது. ?image

https://gigafiber.jio.com/registration  முதலில் இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். இந்த சேவை குறிப்பிட்ட சில பெருநகர பகுதிகளுக்கு மட்டும் தற்போது வழங்கப்படும் எனவும் அதன் பின்பு இந்த சேவை படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் விரிவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் மாத சந்தா மற்றும் வருட சந்தா என வழங்கப்பட இருக்கிறது இதில் குறைந்தபட்சம் ரூ.700 வாடகை முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை திட்டங்கள் இருக்கின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments