பெரு கடல் பகுதியில் கரை ஒதுங்கிய பெரிய திமிங்கலம்

0 339

பெரு நாட்டில், கரையொதுங்கிய கூன்முதுகு கொண்ட திமிங்கலத்தை உள்ளூர் மக்கள் மீண்டும் ஆழ்கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.

அந்நாட்டின் லாம்பேய்க்((Lambayeque))  பகுதியில் உள்ள கடற்கரையில் கூன்முதுகு கொண்ட திமிங்கலம் ஒன்று தரை ஒதுங்கியது. சுமார் 10 மீட்டர் நீளம் கொண்ட திமிங்கலத்தை பார்த்த உள்ளூர் மக்கள், ஒன்று கூடி  அதனை மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயன்றனர். ஆனால் திமிங்கலம்  சுமார் 6 புள்ளி 5 டன் எடையுடன் காணப்பட்டதால், அதனை தள்ள முடியாமல் தவித்த மக்கள், இறுதியாக வால் பகுதியை சிலர் தள்ள, மெதுவாக திமிங்கலத்தை ஆழ்கடல் பகுதிக்கு நகர்த்தினர்.

கூன்முதுகு கொண்ட திமிங்கலத்தில் காணப்படும் ‘ப்ளூபர்’ என்ற கொளுப்பு, சோப், அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கென இவ்வகை திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 15 நாட்களில் இரு திமிங்கலங்கள் தானாக கரை ஒதுங்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments